’குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!
புதன், 3 மார்ச் 2021 (07:20 IST)
குக் வித் கோமாளி பவித்ரா நடித்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் குக்கள் மற்றும் கோமாளீகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே புகழ், தர்ஷா, ஷிவானி, பவித்ரா உள்ளிட்ட ஒரு சிலருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது என்பதும் அவ்வப்போது அவர்கள் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா நடித்திருக்கும் மலையாள திரைப்படமான உல்லாசம் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது/ இன்று அல்லது நாளை இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி பவித்ரா நடிக்க இருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அறிவிப்புகளும் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவர உள்ளது. அவர் நடிக்கயிருக்கும் இரண்டு படங்கள் குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.