தொடர்ந்து படங்கள் தயாரிக்கும் விஷ்ணு விஷால்

புதன், 30 நவம்பர் 2016 (14:36 IST)
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் கான்பிடென்ட் லெவல் அதிகரித்துள்ளது.

 
சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாவீரன் கிட்டு டிசம்பர் 2 திரைக்கு வருகிறது. முருகானந்தம் இயக்கத்தில் அவர் தயாரித்து நடித்துவரும் கதாநாயகன் திரைப்படம் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியாக உள்ளது.
 
இதுதவிர முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். அத்துடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு இயக்கும் படத்தை தயாரித்து நடிக்க உள்ளார்.
 
இனி தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பது என்ற முடிவை விஷ்ணு விஷால் எடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்