டாப் லெஸ் போட்டோஷுட் நடத்திய பிரபல நடிகை

செவ்வாய், 23 ஜனவரி 2018 (12:11 IST)
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக  நடித்திருந்தவர். இவர் தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் வைரமுத்து. ஊட்டி, சென்னை காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்திய எல்லைப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் ஒரேயொரு பாடல் காட்சியை மட்டும் ஐரோப்பாவில் படமாக்கினார்  மணிரத்னம். இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. 
 
இந்நிலையில் அதிதி சமீபத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணாமாக ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். இவை தற்போது வைரலாக சமூக  வலைதளங்களில் பரவி வருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்