வர்றார் 'பேய்மாமா' வடிவேலு!

திங்கள், 4 மார்ச் 2019 (11:07 IST)
மக்களை சிரிக்க வைத்து ரசிக்க வைத்து சிந்திக்க வைத்த வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.



 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெர்சல் மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதே நேரம் வடிவேலு இல்லாத இடத்தை சந்தானம் சூரி யோகிபாபு என அடுத்தடுத்து வந்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்போது வடிவேலு முழு ஈடுபாட்டோடு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். வடிவேலு கதாநாயகனாக நடித்த 23 மூன்றாம் புலிகேசி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வடிவேலு பேய் மாமா என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். பேய் மாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்