காமெடி நடிகரை காதலிக்கும் கண்டேன்பட நடிகை

ஞாயிறு, 28 ஜூன் 2015 (14:49 IST)
தமிழில் கண்டேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், ரேஷ்மி கவுதம். இவர் தற்போது மாப்பிள்ளை விநாயகர், ப்ரியமுடன் ப்ரியா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.


 

 
ரேஷ்மிக்கும் தெலுங்குப் படங்களில் காமெடியனாக நடித்து வரும் சுதீருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்த பிறகே இவர்களின் காதல் விவகாரம் வெளிஉலகுக்கு தெரியவந்தது.
 
இவர்கள் இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் இணைந்து நடித்ததில்லை. இவர்கள் இணைந்திருக்கும் படம் சினிமாவுக்காக எடுக்கப்பட்டதில்லை, நிஜமாக இருவரும் காதல் கொண்ட நேரத்தில் எடுக்கப்பட்டது.
 
எப்போ மேடம் கல்யாணம்?

வெப்துனியாவைப் படிக்கவும்