பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தைப் பற்றிதான் ஆச்சரியமாக பேசிக்கொள்கிறார்கள். பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தின் இன்ட்ரோ சாங்கை மெட்ரோ ரயிலில் படமாக்குகிறார்கள். சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இடம்பெறும் இந்தப் பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். இந்தப் பாடலில் கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.