சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் தனுஷின் விஐபி

திங்கள், 28 ஜூலை 2014 (17:28 IST)
5. இருக்கு ஆனா இல்ல
 
இன்னொரு ஹாரர் படம். எந்தப் படமாக இருந்தாலும் வெளியாகும் முன்பு ஒரு பெப்பை ஏற்படுத்தினால்தான் ரசிகர்களை திரையரங்குக்கு வரவைக்க முடியும்.

இந்தப் படத்துக்கு அது இல்லை. சென்ற வார இறுதியில் (ஜுலை 25 முதல் 27 வரை) சென்னை மாநகரில் இதன் வசூல் வெறும் எட்டாயிரம் ரூபாய்கள். இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 3.3 லட்சங்கள். 
 

4. அரிமா நம்பி
 
மூன்று ஹாலிவுட் படங்களின் கலவையான அரிமா நம்பி சென்ற வார இறுதியில் 1.7 லட்சங்களை வசூலித்துள்ளது.

நான்கு வாரங்களில் இதன் சென்னை மாநகர வசூல் 2.5 கோடிகள்.
 

3. சதுரங்க வேட்டை
 
நட்டி நடித்துள்ள இப்படம் சுமாரான வசூலை பெற்றுள்ளது.

சென்ற வார இறுதியில் இதன் வசூல் 17.18 லட்சங்கள். இதுவரை இதன் சென்னை வசூல் 70 லட்சங்கள்.
 

2. திருமணம் எனும் நிக்காஹ்
 
நஸ்ரியா நசீமின் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தில் நடித்து முடித்த பின், சொந்த வாழ்க்கையில் காதலித்து திருமண நிச்சயம் முடிந்து அடுத்த மாதம் திருமணமும் செய்யப் போகிறார் நஸ்ரியா.

படம் என்னவோ இப்போதுதான் ரிலீஸாகியிருக்கிறது. சென்ற வாரம் வெளியான படம் வார இறுதியில் 24.7 லட்சங்களை வசூலித்துள்ளது.
 

1. வேலையில்லா பட்டதாரி
 
இந்த வாரமும் அதே முதலிடம். சென்ற வார இறுதியில் இப்படம் 1.24 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது. நேற்றுவரை இதன் சென்னை சிட்டி வசூல் மட்டும் 4.05 கோடிகள்.

கோச்சடையான் சென்னையில் ஐந்தரை கோடி அளவுக்கே வசூலித்தது. அதனை தனுஷின் படம் தாண்ட அதிக வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்