சென்னை மாநகர பாக்ஸ் ஆபிஸ்

புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:51 IST)
5. வேலையில்லா பட்டதாரி
ஆறு வாரங்களில் 6.6 கோடிகளை வசூலித்து கோச்சடையானை அனாயசாமாக முந்தியிருக்கிறது தனுஷ் படம். சென்ற வார இறுதியில் (ஆக. 22 முதல் 24 வரை) இதன் வசூல் 2.5 லட்சங்கள்.
 

4. ஜிகர்தண்டா
பில்டப்புக்கு ஏற்ற வசூல் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வார இறுதியில் 8.9 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னை சிட்டியில் 2.8 கோடிகளை வசமாக்கியுள்ளது.
 

3. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
பரத்தின் 25ஆவது படமான இது சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 17.14 லட்சங்கள். சுமார் ஓபனிங்.
 

2. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
முதல் வார இறுதியில் - அதாவது படம் வெளியான முதல் மூன்று தினங்களில் எட்டு லட்சம் அளவுக்கு வசூலித்த படம், இரண்டாவது வார இறுதியில் 26.5 லட்சங்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. அதாவது முதல் வார இறுதியைவிட சுமார் மூன்றரை மடங்கு அதிகம் வசூல். முதல் பத்து தினங்களில் இதன் சென்னை சிட்டி வசூல் 53.7 லட்சங்கள்.
 

1. அஞ்சான்
படம் வெளியான முதல் மூன்று தினங்களில் இரண்டரை கோடி அளவுக்கு வசூலித்த படம், இரண்டாவது வார இறுதியில் அதில் பாதியைக்கூட வசூலிக்கவில்லை. வசூல் 79. 3 லட்சங்கள்தான். முதல் பத்து தினங்களில் இதன் வசூல் 3.9 கோடிகள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்