சென்ற வருட கிறிஸ்துமஸுக்கு சார்லி வெளியானது. மார்டின் ப்ரக்காட் இயக்கிய இதில் துல்கர் சல்மான், பார்வதி நடித்திருந்தனர். படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் துல்கரின் நடிப்பைப் பார்த்த மாதவன் ட்விட்டரில் அவரை பாராட்டியிருந்தார்.
மாதவன் சார்லி படத்தையும், அதில் நடித்த துல்கரையும் பாராட்டியதால், சார்லி தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. நல்ல படங்களின் ரீமேக்கில் நடிக்க எனக்கு தயக்கமில்லை, ஆனால், சார்லி ரீமேக்கில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை என மாதவன் கூறியிருந்தார்.