மம்முட்டியும், மோகன்லாலும், திலீப்பும், நிவின் பாலியும் எல்லாம் கேரளாவில் சுதந்திரமாகத்தான் நடமாடுகிறார்கள். ஆனால், தமிழ் நடிகர்கள் கேரளாவுக்கு சென்றால் மட்டும் ரசிகர்களின் தள்ளு முள்ளு கட்டுக்கடாங்காமல் போகிறது.
விஜய் கேரளா சென்றால் ரசிகர்கள் கூட்டம் அம்மும், தடியடி நிச்சயம். இப்போது சூர்யா சென்றாலும் அதேநிலைதான். எஸ் 3 படத்தை புரமோட் செய்ய திருவனந்தபுரம் சென்ற சூர்யாவை காண விமானநிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். அவர் தங்கியிருந்த ஹேnட்டலிலும் ரசிகர்கள் முண்டியடித்ததில் ஹேnட்டல் கண்ணாடி உடைந்திருக்கிறது. போலீஸ் தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க வேண்டியிருந்திருக்கிறது.