இயக்குனர் பாலா படத்தில் நடிக்க வேண்டுமா - இதோ வாய்ப்பு!

சனி, 19 நவம்பர் 2016 (15:18 IST)
சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற திரைப்படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா அடுத்து இயக்கும் படத்தில், சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்படவுள்ளது.


 

 
எனவே, அதுகுறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 16 வயது முதல் 20 வயது வரையுள்ள, சினிமாத்துறையில் அனுபவம் உள்ள மற்றும் இல்லாத பெண்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 
அப்படி விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்புவதற்கு கடைசி தேதியாக நவம்பர் 26, 2016 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்