முன்னணி நடிகர் வெளியிட்ட சேலஞ்ச் வீடியோ !கலாய்த்த காமெடி நடிகர்
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (20:04 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவரும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான கிருஷ்ணா…முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கொரொனா காலக்கட்டம் என்பதால் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு சக நடிகர்களுக்கு அதை ஒரு சேலஞ்சாக விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு கம்பத்தைக் கையில் பிடித்தபடி, ஐந்து விரல்களுக்கு நடிவில் அதை பேலன்ஸ் செய்து, அது கீழே விழாமல் எவ்வளவு நேரம் பிடித்திருக்க முடியும் என்பதுதான் சேலஞ்ச். தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
இந்த சேலஞ்சில் நடிகர் சதீஸ் கலாய்த்து அவர் மற்றொரு வீடியோ பதிவிட்டுள்ளார்.