விஷால் கைது? ரூ.8.45 கோடி பணம் கையாடல் ஆதரத்துடன் அம்பலம்

வியாழன், 24 ஜனவரி 2019 (20:11 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் பணத்தை எடுத்து விஷால் கையாடல் செய்துள்ளதாக எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் இளையராஜா பாராட்டு விழாவிற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழுவைக் கூட்டவில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், எஸ்.வி.சேகர், கே.ராஜா, ஏ.எல்.அழகப்பன், கதிரேசன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் விஷால் மீது சென்னை காவல் ஆணையரிடம் சங்க பணத்தை கையாடல் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். 
 
அதாவது, அனுமதியின்றி தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி ரூ.8.45 கோடி பணத்தை விஷால் எடுத்து செலவழித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விஷால் சங்க பணம் குறித்த கணக்கு வழக்கு தொடர்பான கடித்தத்தில் ரூ.8.45 கோடி பணத்தை எடுத்துள்ளோம் என ஒப்புக்கொண்டுள்ளார் என ஆதாரத்தையும் கொடுத்துள்ளனர். 
 
சங்கத்தின் பணத்தை அனுமதியின்றி எடுத்து விட்டு, திரும்பி வைத்தாலும் அது கையாடல்தான். ஆகையால் விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இம்மாதியான சம்பவங்கள் இளையராஜா பாரட்டு விழாவிற்கு சிக்கலை கொடுத்துள்ளது. 
 
அதோடு, சங்கத்திலிருந்து எடுத்த பணத்தை திரும்ப வையுங்கள். அதோடு உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலை அறிவியுங்கள் என கூறியிருப்பதால் விஷாலுக்கும் பிரச்சனை ஏற்படுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்