சினிமாத்துறைக்கான சில கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மத்திய, மாநில அரசுகளிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதை உடனே நிறைவேற்றாவிட்டால், வரும் 30ஆம் தேதி முதல் அனைத்து சினிமா சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபடும் என அறிவித்தார் விஷால்.
ஆனால், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன், தாங்கள் தியேட்டர்களை மூட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். “ஒரு லட்சம் பேர் சினிமாவையும், 25 ஆயிரம் பேர் தியேட்டர்களையும் நம்பி பிழைப்பு நடத்துகிறார்கள். ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் இவர்கள் நிலமை என்னாவது? எங்கள் சங்கத்துக்கு உட்பட்ட 169 தியேட்டர்களையும் நாங்கள் மூட மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.