அட்டகத்தி கூட்டணியின் உள்குத்து

புதன், 5 ஆகஸ்ட் 2015 (14:55 IST)
தினேஷ், நந்திதா நடித்த அட்டகத்தி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், கார்த்திக் ராஜு. இவர் தினேஷ், நந்திதாவை வைத்து இயக்கும் படத்துக்கு உள்குத்து என பெயர் வைத்துள்ளனர்.
 
கார்த்திக் ராஜு கூறுவதை கேட்டால் இதுவும் அட்டகத்தி போன்ற ரொமான்டிக் காமெடி என தெரிகிறது. பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய் படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் உள்குத்துக்கு இசையமைக்கிறார். 
 
தினேஷ், நந்திதாவுடன் நான் கடவுள் ராஜேந்திரன், பாலா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். கெனன்யா ஃபிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது.
 
பிகே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, சென்னையில் இரண்டு கட்டங்களாக படம் தயாராகிறது. படத்தில் தினேஷ், நந்திதா இருவரும் விற்பனை பிரதிநிதிகளாக நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்