சென்னை பாக்ஸ் ஆபிஸ்

செவ்வாய், 26 மே 2015 (15:12 IST)
5. பிக்கு
சூரஜ் சிர்க்காரின் பிக்கு இந்த வாரம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 7.7 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 44.21 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 

4. தனு வெட்ஸ் மனு
ஆனந்த் எல். ராயின் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 13.6 லட்சங்கள்.

 
 

3. புறம்போக்கு
ஜனநாதனின் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 28.8 லட்சங்களை வசூலித்து 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.40 கோடி.

 
 

2. 36 வயதினிலே
மலையாளப் படத்தின் தழுவலான இப்படம் நகரங்களில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 58 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.56 கோடியை வசூலித்துள்ளது.

 

1. டிமான்டி காலனி
அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இந்த திகில் படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருசேர கவர்ந்துள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 64 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்