முதல்வரை சந்தித்த வலிமை தயாரிப்பாளர்… வைரலாகும் புகைப்படம்!

செவ்வாய், 3 மே 2022 (09:24 IST)
வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆன திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அதன் பின்னர் அஜித்தோடு அவர் வலிமை படத்திலும் இணைந்தார். இப்போது மூன்றாவதாக அஜித் 61 படத்தையும் அவரே தயாரிக்கிறார். சமீபகாலமாக அஜித் ஒரே தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். இவை இல்லாமல் நெஞ்சுக்கு நீதி மற்றும் வீட்ல விஷேசம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்