நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்....

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (16:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுதப்பட்டுள்ளது.

இன்று சென்னைக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, பெசண்ட் நகரில் உள்ள காவல்துறையும் வெடிகுண்டு நிபுணர்களும் விக்ரம் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதில் விக்ரம் வீட்டில் மிரட்டல் விடுத்தது புரளி எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விக்ரம் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனர்.

இதேபோல் சமீபத்தில் தன்ஷ் மற்றும் விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது நடிகர் விக்ரம் கோப்ரா, துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்களில்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்