ஜுன் 3 வெளியாகும் ஹவுஸ்ஃபுல் 3 - இது எதனுடைய காப்பி?

வெள்ளி, 23 ஜனவரி 2015 (16:00 IST)
சஜித் கான் இயக்கத்தில் ஹவுஸ்ஃபுல் படம் 2010 -இல் வெளியானது. அக்ஷய் குமார், அர்ஜுன் ராம்பால், ரிதேஷ் தேஷ்முக், தீபிகா படுகோன், லாரா தத்தா, ஜியா கான் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். படம் பட்டையை கிளப்பியது.
தமிழில் சுமாராகப் போன கமலின் காதலா காதலா படத்தின் கதையை சுட்டு இந்தப் படத்தை எடுத்திருந்தனர். தோல்வியடைந்த படத்தை கொஞ்சமாக மாற்றி எடுத்தால் அப்படம் ஹிட்டாகும் என்ற கமலின் கோட்பாட்டை இந்தப் படம் நிரூபித்தது.
 
2012 -இல் ஹவுஸ்ஃபுல் 2 வெளியானது. அக்ஷய், அசின், ஜான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரிஷி கபூர் என்று இதிலும் நட்சத்திர கும்பல். இந்தப் படமும் 100 கோடி தாண்டி வசூலித்தது.  சில லட்சங்களில் மலையாளத்தில் 1998 -இல் எடுக்கப்பட்ட மாட்டுப்பட்டி மச்சான் என்ற படத்தின் தழுவல்தான் இந்த ஹவுஸ்ஃபுல் 2.
 
இரண்டு பாகங்கள் ஹிட்டானதால் மூன்றாவது பாகத்துக்கு ஏக எதிர்பார்ப்பு. இதிலும் அக்ஷய்தான் ஹீரோ. கூடவே அபிஷேக்பச்சான், ரிதேஷ் தேஷ்முக் இருக்கிறார்கள். ஜுன் 3 படத்தை வெளியிடுவது என்று தீர்மானித்துள்ளனர்.
 
இது எந்தப் படத்தின் தழுவல்? படம் வந்து நாமாக கண்டுபிடித்தால்தான் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்