தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான விமர்சகராக இருப்பவர் ப்ளு சட்ட மாறன். இவரின் விமர்சனப் பாணியும் நன்றாக இல்லாத படங்களை அடித்து வெளுக்கும் பாணியில் பேசுவதும் ரசிகர்களின் விருப்ப சாய்ஸாக இவரை வைத்துள்ளது. அதே நேரத்தில் சினிமாவில் உள்ளவர்கள் மத்தியில் இவர் மீதான வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போது இவரே ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பெல்லாம் முடிந்து இப்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய கூடுதல் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் இசையமைக்கும் பணியையும் மாறனே செய்துள்ளாராம்.