பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து வசனம் எழுதி நடித்த படம், ஆரஞ்சு மிட்டாய். இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. ரசிகர்களும் ஓரளவு வரவேற்பு அளித்துள்ளனர். படம் போட்ட காசை திருப்பும் என்ற உத்தரவாதம் கிடைத்ததே பெரிய விஷயம்தான்.
பீட்சா கார்த்திக் சுப்பாராஜின் இறைவி, பண்ணையாரும் பத்மினியும் அருண்குமாரின் புதிய படம், பிஜு விஸ்வநாதன் இயக்கும் படம், காக்கா முட்டை மணிகண்டனின் படம் என நான்கு படங்களில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி.