’பிகில்’ மாரியம்மாவுக்கு திருமணம். வாழ்த்து கூறிய பாண்டியம்மா!

வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:52 IST)
’பிகில்’ மாரியம்மாவுக்கு திருமணம். வாழ்த்து கூறிய பாண்டியம்மா!
விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த நடிகைக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’பிகில்’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் கால்பந்து வீராங்கனை மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்தவர் காயத்ரி ரெட்டி. இவர் தனது நீண்டநாள் காதலரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்
 
திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த புகைப்படத்தை பார்த்த ’பிகில்’ படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்