பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தினமும் ஏதாவது டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி ஹுவுஸ்மேட்ஸ்களுக்கு போலீஸ்- திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல் திருடர்களாகவும், மகத், செண்ட்ராயன் மற்றும் மும்தாஜ் போலீஸ்களாகவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த வாரம் தலைவியாக தேர்ந்தேடுக்கப்பட்ட ரம்யா போலீஸ்- திருடன் டாஸ்க் ரொம்ப சீப்பாக இருக்கிறது என பிக்பாஸிடம் புகார் கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் ரம்யாவை தலைவி பதவியில் இருந்து நீக்குகிறார். மேலும், அடுத்த வாரம் எவிக்சனுக்கு அவரை நேரடியாக நாமினேட் செய்கிறார்.