நான் மட்டும் என்ன எளக்காரமா? எனக்கும் ஊட்டி விடுங்க - (வீடியோ)

புதன், 27 ஜூன் 2018 (12:56 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

 
பிக்பாஸ் வீட்டில் நேற்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆண் போட்டியாளர்கள் எஜமானர்களாகவும், பெண் போட்டியாளர்கள் வேலைக்காரிகளாகவும் இருக்க வேண்டும். இந்த லக்சரி டாஸ்குக்கு 1600 பாயிண்டுகள் என்பதால் வேறு வழியின்றி பெண்கள் ஒப்புக்கொண்டனர். 
 
அந்நிலையில், இன்றை நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜ் சரியாக வேலை செய்யவில்லை என மஹத் கூற, மும்தாஜ் அவரிடம் கோபப்படுகிறது. அப்போது, எவ்வளவு நேரம் நீங்கள் வேலை செய்யவில்லையோ அவ்வளவு நேரம் நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என தண்டனை கொடுக்க, அதை செய்ய முடியாது என மும்தாஜ் மறுக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில், 2வது புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஊட்டி விட சொல்வது தவறு என வைஷ்ணவி கூற, மும்தாஜும் அதையேதான் கூறினார், செண்ட்ராயன் கூட ஊட்ட சொல்வது தவறு என மஹத் கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்