இங்க எதுக்கு வந்தேனோ... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் அர்ச்சனா!

புதன், 16 டிசம்பர் 2020 (16:33 IST)
பிக்பாஸ் வீடு இறுதி நாட்களை நெருங்க நெருங்க தான் போட்டி, பொறாமை, சண்டை, வாக்குவாதம் என அவரவர் விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர்.
 
முதல் ப்ரோமோவில்  சோம் முட்டையை உடைத்துவிட்டதாக கூறி அர்ச்சனா ஆக்ரோஷமாக கத்தி சண்டையிட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அர்ச்சனா கதறி அழுது  எதுக்கு தான் நான் இங்கு வந்தேனோ என ஆர்ப்பாட்டம் செய்கிறார். 
 
அம்மணியின் நாடகம் ஊருக்கே தெரிந்தது தான். யாருடனாவது சண்டை போடுவது பின்னர் கட்டிப்பிடித்து அன்பை காட்டுகிறேன் என கூறி பொய்யான பாசத்தை பொழிவதுமாக இருந்து வருவதால் அவரது கண்ணீருக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. 
 
இப்படியெல்லாம் செய்தால் மக்கள் பாவப்பட்டு அன்பை காட்டுவார்கள் என நினைக்கும் அர்ச்சனா மாறாக நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் தான் ஆளாகி வருகிறார். வீட்டிற்குள் அர்ச்சனா மட்டும் தான் கோபப்படணும். மற்றவர்களெல்லாம் அவரிடம் அன்பா இருக்கணும். இல்லையெனில் அழுது ஆர்பாட்டம் செய்வாங்க. பண்றத பண்ணிட்டு அழுறதப்பாரு... முட்டையில மொத்த அன்பையும் ஆம்லெட் போட்டுட்டீங்களே அர்ச்சனா...!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்