இந்த ப்ரோமோவில் கமல் மக்களோடு மக்களாக ஆடியன்ஸ்களுடன் அமர்ந்துகொண்டு " பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு வெளியே உள்ள புகழும், விமர்சனமும் போய் சேராது. ஆனால் அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் அவரது குடும்பத்தார்கள் என்று உறவினர்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
பின்னர் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல் " சேரனுக்கு ஒரு ரகசிய அறை, கவினுக்கு ஒரு பப்ளிக்கா ஒரு அரை கிடைத்தது ரெண்டும் ரெண்டு விதமான அறைகள் என்று கூறி பங்கமாக கலாய்த்தார். அதற்கு கவின் நல்லாவே புரிஞ்சுது சார் என்று கூறி கண்ணத்தை தடவினார்.