பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அஜித் படத்தில் நடித்தும் அவருக்கென்று பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.