ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆனால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது படம் பொங்கலை முன்னிட்டு ஒடிடி தளத்தில் ரிலீஸாகி உள்ளது.
படம் போலியான அறிவியலை பேசுவதாகவும், உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை அதிகளவில் பெற்று வருகிறது. இது சம்மந்தமாக அந்த படத்தின் இயக்குனர் லட்சுமனன் சார் நான் வருங்கால தலைமுறை நல்லாயிருக்கனுமேனு நினைச்சேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். புரோ ரோமியோ ஜூலியட் படம் எடுத்த எனக்கு கமர்சியல் படம் எடுக்கத்தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் புரோ நீங்க சூப்பர் புரோ யூ வ்ன் லூஸ் என்று தெரிவித்துள்ளார். எனக் கேட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை விவசாயிகளுக்கு ஆதரவான படம் போல படக்குழு காட்டி வரும் நிலையில் படத்தில் விவசாயிகளுக்கு எதிரானக் காட்சிகள் இருந்ததாம். நிலத்தடி நீர் குறைந்ததற்கு காரணமே விவசாயிகள் அதிகளவில் நீரைப் பயன்படுத்துவதே என்பது போன்ற காட்சிகள் எல்லாம் இருந்ததாம். ஆனால் இதை அப்படியே ரிலீஸ் செய்தால் எதிர்ப்பு வரும் எனக் கருதி பின்னர் அந்த காட்சிகளை படக்குழு நீக்கியதாம். ஆனால் இயக்குனரோ சமூகவலைதளங்களில் பொங்கி வருகிறார்.