ஜனவரி 22ஆம் தேதி பாவனா - நவீன் திருமணம்

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (17:57 IST)
நடிகை பாவனா - தொழிலதிபர் நவீன் திருமணம் ஜனவரி 22ஆம் தேதி நடக்க இருக்கிறது.

 
கேரளாவைச் சேர்ந்த பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார். இரண்டு வருடம் காதலித்த பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
 
ஆனால், அதற்குள் எதிர்பாராத சம்பவம் ஒன்று பாவனா வாழ்க்கையில் நடந்துவிட்டது. அப்போது பாவனாவின் உடன் இருந்து, அவரைத் தேற்றியது நவீன் தான். பாவனாவை மகிழ்ச்சிப்படுத்த, நிச்சயதார்த்தத்தைக் கூட நடத்தினார். அப்போது, இன்று (டிசம்பர் 22) திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது.
 
ஆனால், சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுவே பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ள நிலையில், ஜனவரி 22ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதன்பிறகு நடைபெறும் திருமண வரவேற்பில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்