இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ”800” திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. ஈழப்படுகொலையின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா “முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும். நம் ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. எங்களை பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கை துரோகிதான்” என கூறியுள்ளார்.
மேலும் திலீபன் குறித்த படம் ஒன்றை எடுத்தால் அதில் தமிழ் திரையுலகினர் இலவசமாக பணியாற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.