டிமானிடைசேஷனை விமர்சிக்கும் பாரதிராஜாவின் புதிய படம்

வியாழன், 9 மார்ச் 2017 (17:25 IST)
நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் மோடி, அன்று நள்ளிரவுடன் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.


 
 
நாட்டி பண நெருக்கடியையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி பல உயிர்களை இந்த டிமானிடைசேஷன் பலிவாங்கியது. அதனை மையப்படுத்தி பாரதிராஜா தனது புதிய படத்தை இயக்குகிறார்.
 
நவம்பர் 8 இரவு எட்டு மணி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதையை ரத்னகுமார் எழுதியுள்ளார். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜாவை இசையமைக்க கேட்கவிருக்கிறார்கள்.
 
பாரதிராஜாவின் இந்தப் படம் டிமானிடைசேஷனையும், அதனை அமல்படுத்திய மோடியையும் விமர்சிக்கப் போகிறதா இல்லை வியந்து பேச வைக்கப் போகிறதா என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்