சிம்பா வரட்டும் நான் யார்னு காட்றேன்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (17:22 IST)
சிம்பா படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பானு ஸ்ரீ மெஹ்ராவை கோடம்பாக்கம் கொஞ்சம் வித்தியாசமாகவே பார்க்கிறது. சரியான வாய்ப்புகள் வந்தால் முன்னணிக்கு வரும் தகுதியும் திறமையும் கவர்ச்சியும் அவரிடம் இருப்பதாக ஒரு நம்பிக்கை.


 
 
பானுவும் அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறார். சிம்பா வரட்டும், நான் யார்னு காட்றேன் என்று தொடை தட்டாததுதான் குறை.
 
சரி, அதென்ன சிம்பா? பானு நடித்துவரும் படத்தின் பெயர். பரத் நாயகன். காமெடிக்கு பிரேம்ஜி. இந்தப் படத்தில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கிறாராம் பானு. முக்கியமாக ஒரு கனவுக் காட்சியில் தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சியை பார்த்தால் பார்வையாளர்களுக்கே ஜுரம் வரும் என்கிறார்கள்.
 
சிம்பா பார்க்க கம்பளியோடத்தான் போகணும் போலிருக்கே.

வெப்துனியாவைப் படிக்கவும்