7 கோடிக்கு ஆடம்பர கார் வாங்கிய பாகுபலி நடிகர் !

திங்கள், 29 மார்ச் 2021 (18:05 IST)
சில ஆண்டுகளுக்கு முன் ராஜமெளலி இயக்கத்தில்  பிரபாஸ், ராணா நடிப்பில் வெளியான படம் பாகுபலி1, மற்றும் பாகுபலி2. இந்த இப்படம் இந்திய எல்லையைத்தாண்டி உலகமெங்கும் வசூல் வாரிக் குவித்தது.

இதையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் ஆகிவிட்டார் நடிகர் பிரபாஸ். அவர் ஷாகோ படத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றதாகத் தகவல் வெளியான நிலையில் இதைவிடவும் அதிகமாக அவர் சம்பளம் வாங்குவதாகத் தெரிகிறது.

தற்போதைக்கு இந்திய சினிமாவில் அதிகளம் சம்பளம் வாங்கும் நடிகர் பிரபாஸ் தான். இவரது நடிப்பில் ராதே ஸ்யாம் படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.சலார், ஆதி புரூஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், பிரபாஸ் சுமார் ரூ.7 கோடிக்கு விலையுயர்ந்த லாம்போஹினி காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பிரபாஸின் தந்தை பிறந்தநாளில் இக்கார் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy Birthday To Surya narayana Raju Garu.#Prabhas pic.twitter.com/gonJeMsFnl

— BujjiGadu™ (@TeamBujjigadu) March 28, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்