‘பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்கா நடித்த ஒரேயொரு படம் ‘பாகமதி’. ஜி.அசோக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னிமுகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். ஜனவரி 25ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.