பீப் பாடலை உருவாக்கியவன் மனநிலை பாதிக்கப்பட்டவன், அவனை தூக்கில் போட வேண்டும் - ஒய்.ஜி.மகேந்திரன் தாக்கு

வியாழன், 17 டிசம்பர் 2015 (17:58 IST)
சிம்பு - அனிருத்தின் கூட்டு உழைப்பில் உருவான பீப் சாங்குக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஒய்.ஜி.மகேந்திரனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது.


 
 
"பீப் பாடல் என்ற சர்ச்சைக்குரிய பாடல் ஒன்று வெளிவந்து இருக்கிறது. இந்த பாடலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அனிருத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த பாடல் வெளிவர யார் காரணமாக இருந்தாலும் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பாடலை வெளியிட்டவரை கண்டுபிடிக்க வேண்டும். 
 
கேவலமான இந்த பாடலில் எந்த ஒரு உணர்வோ, மெலடியோ இல்லை. குழந்தைகள் குறிப்பிட்ட அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகள் என்ன என்று கேட்கையில் பெரியவர்கள் சங்கடப்படக் கூடிய நிலைமையை இந்த பாட்டு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாடலுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இதுமாதிரி பாடலை உருவாக்கமுடியும். 
 
கல்லறைக்குள் இருக்கும் கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலால் நிச்சயம் நிம்மதி இழந்திருப்பார். யார் மீதும் தவறான பழிகளை இந்த பாடல் உருவாக்கி விடக்கூடாது. எனவே இதற்கு காரணமானவர் யார் என்பதை கண்டுபிடித்து அவரை தூக்கில் போடவேண்டும்"
 

வெப்துனியாவைப் படிக்கவும்