தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ 100வது நாள்: நெல்சன் டுவிட்

ஞாயிறு, 28 நவம்பர் 2021 (19:07 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய 100 நாட்கள் ஆகிவிட்டது என இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அதில் ஒரு அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்றும் அந்த புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், நெல்சன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிவடையும் என்றும் அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்