பீஸ்ட் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

சனி, 26 மார்ச் 2022 (10:00 IST)
பீஸ்ட் படத்தின் வெள்நாட்டு திரையரங்க உரிமையை முன்னணி நிறுவனமான ஐங்கரன் கைப்பற்றியுள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.  இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் வியாபாரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பித்து விட்டது. தமிழ் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் இப்போது வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐங்கரன் நிறுவனம் தமிழில் படங்களை தயாரித்து வந்த நிலையில் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்