ஒன்றல்ல மூன்று படங்களில் நடிக்கும் பாரதிராஜா

சனி, 29 நவம்பர் 2014 (11:30 IST)
ஓம் படத்தில் கோட் அணிந்து வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் பாரதிராஜா. நிர்மல்குமார் இயக்கும் இந்தப் படத்தை பாரதிராஜாவின் மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
மனோஜ் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தையும் மனோஜ் கிரியேஜன்ஸே தயாரிக்கிறது. இந்தப் படத்திலும் முக்கியமான வேடத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார்.
 
அத்துடன் விஎல்எஸ் ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரிப்பில் கிஷோர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவும் ஒத்துக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா.
 
மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்ட அதேநேரம் ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார். அகத்தியன் கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் சினேகன் நடிப்பார் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்