பலே படக்குழு... நன்றி தெரிவித்த சசிகுமார்

திங்கள், 14 நவம்பர் 2016 (11:03 IST)
செப்டம்பர் 21 புதிய படத்தை தொடங்கினார் சசிகுமார். நவம்பர் 10 மொத்தப் படப்பிடிப்பும் முடிவுற்றது. ஐம்பதே தினங்களில் அம்சமாக ஒரு படம். அந்தப் படம்தான் பலே வெள்ளையத்தேவா.

 
அறிமுக இயக்குனர் சேலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், கோவை சரளா, சங்கிலி முருகன் நடித்திருக்கும் இந்தப் படத்தை சசிகுமாரே தயாரித்துள்ளார். திட்டமிட்டபடி ஒரே ஷெட்யூல்டில் படம் முடிந்ததால் மொத்த படக்குழுவுக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் சசிகுமார்.
 
சசிகுமார் தேவர் சாதி பெருமை பேசும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார் என்று குற்றச்சாட்டு இருக்கையில், படத்தின் பெயரிலேயே தேவரை கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும், இது ஆக்ஷன் படம் அல்ல காமெடிப் படம் என்கிறார்கள்.
 
படம் வரட்டும் பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்