பத்து தினங்களில் 240 கோடிகளை கடந்த பஜ்ரங்கி பைஜான்

செவ்வாய், 28 ஜூலை 2015 (12:27 IST)
சல்மான் கான் நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படத்தின் வசூல் வேட்டை தொடர்கிறது. முதல் பத்து தினங்களில் (கடந்த ஞாயிறுவரை) இப்படம் இந்தியாவில் மட்டும் 240.72 கோடிகளை வசூலித்துள்ளது.
சல்மானின் வழக்கமான மசில் படங்களை போலன்றி கதையோட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளது பஜ்ரங்கி பைஜான் திரைப்படம். விஜயேந்திர பிரசாத்தின் கதையை கபீர் கான் இயக்கியிருந்தார். படம் வெளியான நாள் முதல் வசூலை அள்ளுகிறது.
 
முதல்நாள் வசூலில் இந்திப் படங்களில் 7 -வது இடத்தைப் பிடித்தாலும் அடுத்தடுத்த தினங்களில் வசூல் அதிகரித்து வார இறுதி வசூலில் மூன்றாவது இடத்துக்கு படம் முன்னேறியது. கடந்த வார இறுதியிலும் வசூல் அபாரமாக இருந்தது. அதனால் முதல் பத்து தினங்களிலேயே 240.72 கோடிகளை கடந்துள்ளது. இது இந்திய வசூல். வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால், 291.87 கோடிகள். 
 
அமீர் கானின் பிகே இந்தியாவில் 300 கோடிகளை தாண்டி வசூலித்தது. வெளிநாடுகளில் பஜ்ரங்கி பைஜானைவிட பல மடங்கு வசூல். அதனால் மொத்தமாக அப்படம் 700 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. அந்த வசூலை இப்படம் எட்டுவது மிகக்கடினம்.

வெப்துனியாவைப் படிக்கவும்