மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் அமலா பால்

திங்கள், 15 பிப்ரவரி 2016 (17:24 IST)
திருமணத்துக்குப் பிறகு தமிழில், பசங்க 2 படத்தில் மட்டுமே நடித்தார் அமலா பால். யார் அவரை அணுகி கேட்டாலும் ஸாரிதான் பதிலாக வருகிறது. தாய்மொழி மலையாளத்தில் அப்படியில்லை.
 

 


ராஜேஷ் பிள்ளையின் மிலி படத்தில் நடித்தவர், அடுத்து ஜெய்சூர்யா நாயகனாக நடிக்கும் ஷாஷகானும் பரீக்குட்டியும் படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் அஜு வர்க்கீஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
 
தமிழுக்கு நோ சொல்லி மலையாளத்தில் மட்டும் அமலா பால் நடிக்கும் மர்மம் என்னவோ.

வெப்துனியாவைப் படிக்கவும்