பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டு, எது குறைவான ரிஸ்கோ அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் அஜித். சிவா இயக்கும் படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கிறதா? சரி, தொடர்ந்து அவரே படம் இயக்கட்டும். அனிருத்தின் ஆலுமா டோலுமா ரசிகர்களை ஆட வைக்கிறதா? சரி, அவரே அடுத்தப் படத்துக்கும் இசையமைக்கட்டும்... ரிஸ்க் என்ற தேவையில்லாத விஷயம் அஜித்தின் அகராதியில் இப்போதைக்கு இல்லை.