அட்லி தயாரிக்கும் ‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’ டீசர் எப்படி இருக்கு?

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (09:17 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லி மற்றும் இன்னொரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே ஷூட்டிங் முடிந்த நிலையில் சல்மான் கான் நடித்த ஒருக் காட்சியை சமீபத்தில் படமாக்கி இணைத்தனர்.

படம் டிசம்பர் 25 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது டீசர் ரிலீஸாகியுள்ளது. தெறி படத்தின் காட்சிகளை அப்படியே பிரதியெடுத்தது போலவே பல ஷாட்களும் பேபி ஜானில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் மசாலா படமாக பேபி ஜான் இருக்கும் என்பதை இந்த டீசர் கோடிட்டு காட்டியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்