பிரமாண்ட வெற்றி பெற்ற பாகுபலியின் இரண்டாம் பாகம் பரபரப்பாக தயாராகி வருகிறது. பாகுபலியின் சாதனையை முறியடிப்பதுதான் இரண்டாம் பாகத்தின் இலக்கு. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜுடன் இரண்டாம் பாகத்தில் ஷாருக்கானும் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் என்று பல நாள்களாக செய்தி அடிபட்டது. அது தவறான செய்தி.