சிவகார்த்திகேயன் அயலான் ட்ரைலர் ரெடி.. எப்போது ரிலீஸ்?

திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:48 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷூட்டிங் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

ஆனால் இப்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

இதையடுத்து இப்போது படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும், அதற்கான வி எஃப் எக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் டிரைலர் ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்