தமிழகத்தில் டல்லடிக்கும் அவதார் 2 முன்பதிவு!

திங்கள், 28 நவம்பர் 2022 (15:12 IST)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள அவதார் இரண்டாம் பாகத்திற்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 16ல் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை என்று சொல்லப்படுகிறது. படம் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருப்பதாக ரசிகர்கள் இன்னும் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்