ஆட்டோ டிரைவரான சமுத்திரகனி

வெள்ளி, 18 நவம்பர் 2016 (18:03 IST)
ரெட்டச்சுழி படத்தை இயக்கிய தாமிரா அடுத்து, ஆண் தேவதை என்ற படத்தை இயக்குகிறார். சென்னை மெரினா கடற்கரையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


 
 
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். இதில் அவர் இதுவரை நடித்திராத, ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
 
உலகமயமாதல், நகரமயமாதல் என சமகால பிரச்சனைகளை அலசும் படமாக ஆண் தேவதை உருவாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்