ஜீவா படத்துக்கு திரைக்கதை எழுதும் அட்லி

திங்கள், 6 ஜூலை 2015 (17:18 IST)
ராஜா ராணி என்ற ஒரே வெற்றிப் படத்தில் அனைவரும் விரும்பும் இயக்குனராகிவிட்டார் அட்லி. விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறவருக்கு வாய்ப்புகள் வளைத்து வளைத்து வருகின்றன.
 
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும், கெட்ட பயடா இந்த கார்த்தி படத்துக்கு அட்லி வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பவர், வெற்றிமாறன். இதையடுத்து ஜீவா நடிக்கும் படம் ஒன்றுக்கு அட்லி திரைக்கதை எழுதவிருப்பதாக தகவல் வெளியாகிறது. 
 
ஜீவா தற்போது, ராம்நாத் இயக்கத்தில் திருநாள், டிகே இயக்கத்தில் கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் நடிக்கப் போகும் படத்தின் திரைக்கதையை அட்லி எழுதுகிறார் என்று தகவல். படம் குறித்த பிற தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்