சூர்யா படம் வேண்டாம், அதர்வா படம் போதும் - அடம்பிடிக்கும் திரையரங்குகள்

வியாழன், 26 நவம்பர் 2015 (16:01 IST)
டிசம்பர் 4 -ஆம் தேதி பசங்க 2, ஈட்டி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. பசங்க 2 படத்தை பாண்டிராஜ் இயக்க சூர்யா தயாரித்து நடித்துள்ளார்.


 
 
படத்தில் சூர்யா இருந்தாலும், படத்தின் கதை அவரை மையப்படுத்தியதில்லை. மேலும், சண்டைக் காட்சிகளோ, காதல் காட்சிகளோ படத்தில் இல்லை. தனது தயாரிப்பு என்பதால், படத்தின் சந்தை மதிப்பை கூட்டவே சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார் என திரையரங்கு உரிமையாளர்கள் நினைக்கின்றனர். அதனால் பசங்க 2 படத்தைவிட அதர்வாவின் ஈட்டி படத்தை வாங்கவே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 
300 திரையரங்குகளிலாவது பசங்க 2 படத்தை வெளியிட முயற்சி செய்தனர். ஆனால், 200 திரையரங்குகள்கூட பசங்க 2 படத்துக்கு கிடைக்கவில்லை என்கின்றன செய்திகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்