சட்டசபை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருப்பதாக அரவிந்த்சாமி காட்டம்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (17:10 IST)
தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை  சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது.

 
பேரவையில் ஜெயா தொலைக்காட்சி மட்டுமே அனுமதிக்கப்பட்டு மற்ற ஊடகங்கள் வெளியேற்றப்பட்டன. ஜெயா  தொலைக்காட்சியோ தங்களுக்கு சாதகமான காட்சிகளை மட்டும் துண்டுத்துண்டாக ஒளிபரப்பி வருகிறது. இதனால்  சட்டப்பேரவையில் உண்மையில் நடந்தது என்ன என்பது மக்களுக்கு தெரியவில்லை.
 
இது குறித்து நடிகர் அரவிந்த்சாமி காட்டமாக கருத்து கூறியுள்ளார்.
 
"மக்களுடைய உணர்வுகளை எம்.எல்.ஏக்கள் பிரதிபலிக்கவில்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை யாரும் ஏற்றுக் கொள்ள  மாட்டார்கள். இதற்கு மக்களை அவர்கள் சந்திக்க வேண்டும்இ விடுதியில் கட்சியினரை அல்ல.
 
ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் மட்டுமே  காட்டப்படுகின்றன. என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது" என்று தனது ட்விட்டர்  பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்